திருச்சி : திருச்சி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜியாவுல் ஹக் அவர்களின் உத்தரவின் பேரில் , முசிறி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.செந்தில்குமார் அவர்களின் மேற்பார்வையில் முசிறி காவல் ஆய்வாளர் திரு .பால்ராஜ் மற்றும் தொட்டியம் காவல் ஆய்வாளர் திரூ.சந்திரசேகர் ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் தொட்டியம் பகுதிகளில் இரு சக்கர வாகன திருட்டு , மதுபான கடை திருட்டு உட்பட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட நல்வரை கைது செய்து சிறையிலடைத்தனர். திருடப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி