திருச்சி : திருச்சி மாவட்ட காவல்துறை குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் இணைந்து மாவட்ட அளவில் காவலர் குழுமம் (Police Club) மாணவ-மாணவிகளுக்கு பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி ஆயுதப்படை திருமாங்கல்ய திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் P. அஜீம் அவர்கள் வரவேற்று பேசினார். முசிறி அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரசேகரன், குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு ஆலோசகர் முத்துமாணிக்கம் ஆகியோர் குழந்தை உரிமை ,பாதுகாப்பு குழந்தை திருமணத்தை தடுப்பதில் காவல் குழுமம் மாணவ மாணவியரின் பங்கு மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதில் மாணவர்களின் பங்கு குழந்தை நலன் சார்ந்த சட்டங்கள் குறித்து பேசினார்கள்.
சிறப்பு விருந்தினராக திட்டம் 1 ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பிரபாவதி கலந்து கொண்டு பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் குறித்து விழிப்புணர்வு வழங்கினார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
காவல் உதவி ஆய்வாளர் ராஜீவ்காந்தி நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் மணப்பாறை கோவில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, முசிறி அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, மண்ணச்சநல்லூர் சிறுகாம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி ,லால்குடி வாளாடி அரசு மேல்நிலைப்பள்ளி திருவரம்பூர் திருவரம்பூர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி களில் இருந்து 150 மாணவ மாணவிகள் (காவலர் குழுமம்) கலந்து கொண்டார்கள்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி