திருச்சி: திருச்சி மாவட்டம், ஜீயபுரம் காவல் சரகம், திருச்செந்துறையை சேர்ந்த ராஜா வயது (45), என்பவர் திருச்செந்துறை வெள்ளாளர் தெருவில் கோழிகறி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் 04.02.2020 ம் தேதி கம்பரசம்பேட்டைக்கு சென்றுவிட்டு காலை கம்பரசம்பேட்டை தடுப்பணையில் குளிப்பதற்கு சென்ற போது, அங்க வந்த கருத்தபாண்டி மற்றும் தினேஷ் என்ற இருவர் கத்தியை காட்டி மிரட்டி ராஜா சட்டைபையில் இருந்த பணத்தை கேட்க, ராஜா மறுத்த போது கொலை செய்வதாக மிரட்டி ராஜாவிடமிருந்து ரூ.550 பறித்து கொண்டு மிரட்டி விட்டு சென்றுவிட்டனர், பயந்து போன ராஜா ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேற்கண்ட எதிரியை தேடி கைது செய்த போது எதிரியின் பெயர்கள் கருத்தபாண்டி (28) எனவும், தினேஷ் (எ) தினேஷ்குமார்(26) எனவும் தெரிய வந்தது. மேற்படி நபர்களை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேற்கண்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் எதிரிகள் இருவரும் பல்வேறு குற்ற வழக்குகளிலும் சம்;மந்தப்பட்டிருப்பதால், திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜியாவுல் ஹக் இ.கா.ப., அவர்களின் பரிந்துரையின் பேரில் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உத்தரவுப்படி எதிரிகள் இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் இன்று (12.02.2020) திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி