திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 71-வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி அவர்கள் தேசிய கொடியை ஏற்றி குடியரசு தின நிகழ்ச்சியை துவக்கி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் அவர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கும் மற்றும் இதர அரசு ஊழியர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.மேலும் பள்ளி,கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக மாவட்டத்தில் உள்ள 101 பயனாளிகளுக்கு ரூ 59.22இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.
திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா