திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட நகர் போக்குவரத்து காவல் துறை சார்பாக 06.03.2020 காவலர்கள் நண்பர்கள் குழு (Friends of Police) உறுப்பினர்களுக்கான பன்முகத்திறன் பயிற்சி முகாமின் துவக்க விழாவில், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.இரா.சக்திவேல் அவர்கள் தலைமையேற்று துவக்கி வைத்தார்கள். நிகழ்ச்சியில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு.பொன்னிவளவன் அவர்களும், நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.பிரகாஷ் குமார் அவர்களும் கலந்துகொண்டனர்.
மேலும் திண்டுக்கல் மாவட்ட காவலர்கள் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் திரு.ஜெகநாதன் அவர்கள் தலைமையில் பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டது. நிகழ்ச்சியில் காவலர்கள் நண்பர்கள் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு 06.03.2020 முதல் 08.03.2020 மூன்று நாள் பயிற்சி பெற உள்ளனர்.
மாணவர்கள் இதுபோன்று காவல்துறையின் சமூகப்பணியில் ஆர்வமுடன் ஈடுபடுத்திக்கொண்டு சேவை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா