திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் தலைமையில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து பெண் காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களுக்கு போக்சோ சட்டம் குறித்த திறன் மேன்பாட்டு பயிற்சி. பயிற்சியில் கலந்துகொண்ட காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குறித்த புத்தகங்கள் வழங்கினார்கள். 28.11.2021 திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. V. R.ஸ்ரீனிவாசன் அவர்களின் தலைமையில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து பெண் காவல் ஆய்வாளர்கள் சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் ஆகியோர்களுக்கு போக்சோ சட்டம் குறித்து திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. இதில் போக்சோ வழக்குகளை எவ்வாறு புலனாய்வு செய்வது பற்றி எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கௌரவ விரிவுரையாளர் மதுரை அரசு சட்டக்கல்லூரி வழக்கறிஞர் திரு.சிவக்குமார் அவர்கள், மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்கள் குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி.லாவண்யா அவர்கள், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள், காவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குறித்த புத்தகங்கள் வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா