திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று 05.05.2020 அன்று 144 தடை உத்தரவை மீறி வெளியில் சுற்றிய 498 நபர்கள் மீது 298 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 320 இருசக்கர வாகனங்களும், 9 நான்கு சக்கர வாகனங்களும், 2 ஆட்டோகளும் பறிமுதல் செய்யப்பட்டது. பொதுமக்கள் தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவை மனதில் கொண்டு காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்து வீட்டில் இருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா