திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.இரா. சக்திவேல் அவர்களது உத்தரவின்படி 28.10.19 அனைத்து காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை பாதுகாப்பான முறையில் மூடும் பணிகளை காவல்துறையினர் மேற்கொண்டனர். இதன்படி கொடைக்கானல் பண்ணைக்காடு பகுதியிலுள்ள ராம் மஹால் ஊழல்பட்டி மற்றும் ஆலப்பட்டி, தங்கச்சியம்மாபட்டி, சாணார்பட்டி மற்றும் ரெட்டியார்சத்திரம் பகுதியில் ஆபத்தான முறையில் இருந்த ஆழ்துளை கிணறுகளை பொதுமக்கள் உதவியுடன் காவல்துறையினர் மூடினர். மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இதுபோன்று பயனற்ற ஆழ்துளை கிணறுகளை தாங்களே முன்வந்து பாதுகாப்பான முறையில் மூடுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.