திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட நகர வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் 31 வது சாலை போக்குவரத்து வாரத்தை முன்னிட்டு, திண்டுக்கல் நகர் ஓட்டுநர் பள்ளி மற்றும் வாட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர்களின் சார்பில் மாபெரும் சாலை விழிப்புணர்வு மற்றும் தலைகவசத்தின் முக்கிய துவத்தையும் வலியுறுத்தி பேரணி நடைபெற்றது.
இப்பேரணியின் முக்கிய நிகழ்வாக திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர்(RTO) திரு.ஆனந்த் அவர்கள் துவக்கி வைக்க Brick Inspector திரு.மணிவண்ணன் மற்றும் திரு.விஜய குமார் அவர்கள் முன்னிலையில் நகர போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் திரு.பிரகாஷ் குமார் அவர்கள் மற்றும் உதவி ஆய்வாளர் திரு.ராஜா அவர்கள் வழிநடத்தி இதர போக்குவரத்து காவலர்கள் துணையோடு ,திண்டுக்கல் RTOஅலுவலக வளாக நகர விருந்தினர் மாளிகையில் இருந்து MVM பெண்கள் கலைகல்லூரி வழியாக சென்று, நகரின் முக்கிய வீதிகளில், இப்பேரணியின் நிறைவாக மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை வரை சென்று நிறைவு பெற்றது.
இதில் நகர் ஓட்டுநர் பள்ளிகளான MP.ஓட்டுநர் பள்ளி மற்றும் நல்லையா மற்றும் வெள்ளிமலையான் ஓட்டுநர் பள்ளிகளின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா