திண்டுக்கல் : திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் போலீசார் நடைமேடை 1-ல் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது பெங்களூருவில் இருந்து நாகர்கோவில் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன் பகுதியில் உள்ள பொதுப்பெட்டியில் சோதனை நடத்தினர். அப்போது பாளையங்கோட்டையை சேர்ந்த மணிகண்டன்(49) என்பவர் வெளி மாநில மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரிய வந்தது இதையடுத்து ரயில்வே போலீசார் மணிகண்டனை கைது செய்து வெளி மாநில மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை செய்கிறார்கள்.
திண்டுக்கல்லை சேர்ந்த 30 வயது பெண் தனது பெயரில் போலியாக முகநூல் கணக்கு தொடங்கி, தன்னை அவதூறாக சித்தரித்து பதிவுகள் செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இது குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து
தூத்துக்குடி மார்க்கெட் பகுதியை சேர்ந்த பிரவீன் (32) என்பவரை கைது செய்தனர் மேலும் விசாரணையில் பெண்ணின் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி பெண்ணை தவறாக சித்தரித்து பதிவுகள் செய்தது தெரியவந்தது. மேலும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகில் உள்ள கோனூரை சேர்ந்த சென்ராயன் மகன் சசிக்குமார்(22). இவர் அதேபகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதை அடுத்து ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீசார் சசிக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்