திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கிராமங்களுக்கே நேரடியாக சென்று புகார் குறித்த கோரிக்கை மனுக்களை பெற்றும், கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வுவை போலீசார் ஏற்படுத்தி வருகின்றனர். திண்டுக்கல் புறநகர் டிஎஸ்பி வினோத் மற்றும் நத்தம் காவல் ஆய்வாளர் ராஜ முரளி ஆகியோர் சாணார்பட்டியை அடுத்த வீரசின்னம்பட்டியில் பொதுமக்களிடம் நேரடியாக புகார் மனுக்களை பெற்றனர். மேலும் நிலப் பிரச்சனை மற்றும் பொது பிரச்சனைகளை புகார் மனுக்களாக தரும்படியும் கூறினார்`கள். அங்குள்ள பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வும், சிசிடிவி கேமராக்களின் பயன்பாடு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் தெய்வம் , அடியனூத்து பகுதியில் உள்ள பொதுமக்களை அணுகி புகார்களை நேரடியாக பெற்று கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.முருகன் அவர்கள் வத்தலகுண்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எழுவணம்பட்டியில் அங்குள்ள பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களது அனைத்து விதமான குறைகளை புகார் மனுக்களாக பெற்றனர்.இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்கள். மேலும் அப்பகுதி பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு அறிவுரைகளையும் கூறினார்கள். நிகழ்ச்சியில் வத்தலக்குண்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.கலையரசன் அவர்களும் உடனிருந்தார்.
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி கொடைக்கானல் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ஆத்மநாதன் அவர்கள் தலைமையில் தாண்டிக்குடி காவல் நிலைய ஆய்வாளர் திரு.முருகன் அவர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர் திரு.ரமேஷ் ராஜா ஆகியோர் பண்ணைக்காடு பகுதியில் உள்ள பொதுமக்களை ஒன்றிணைத்து அவர்களது அனைத்து விதமான புகார் மனுக்களை நேரடியாக பெற்றனர். இதுகுறித்து விரைந்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்கள்.
மேலும் தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளதால் கொரோனா வைரஸில் இருந்து தற்காத்துக் கொள்ள அனைவரும் முகக்கவசம் அணியும் படியும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் படியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அசோகன் அவர்கள் தலைமையில் ஒட்டன்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ஸ்ரீனிவாசகன் அவர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர் திரு.கணேசன் ஆகியோர் தும்பச்சம்பட்டியில் பொதுமக்களை ஒன்றிணைத்து அவர்களின் நீண்ட கால கோரிக்கை மனுக்கள் மற்றும் அனைத்து விதமான புகார் மனுக்களை பெற்றனர். இதுகுறித்து விரைவில் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தனர். மேலும் கிராமப்புறங்களில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீது இழைக்கப்படும் அநீதிகள் குறித்தும் அவற்றில் இருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். தற்போது பண்டிகை காலம் என்பதால் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்லும் படியும், கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் படியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி வேடசந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மகேஷ் அவர்களின், தலைமையில் வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.கவிதா அவர்கள் மற்றும் பயிற்சி சார்பு ஆய்வாளர் திரு. ரவிசங்கர் ஆகியோர்கள் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் முருநெல்லிக்கோட்டை ஊராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களை ஒன்றிணைத்து அவர்களது அனைத்து விதமான புகார் மனுக்களை நேரடியாக பெற்றனர். இதுகுறித்து விரைந்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்கள்.
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் நகர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மணிமாறன் அவர்களின், தலைமையில் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. உலகநாதன் அவர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர் திரு. ஷேக் தாவுத் ஆகியோர்கள் வேடப்பட்டி பகுதியிலுள்ள பொதுமக்களை ஒன்றிணைத்து, அவர்களது அனைத்து விதமான புகார் மனுக்களை நேரடியாக பெற்றனர். இதுகுறித்து விரைந்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்கள்.