திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட இரண்டாம் கட்ட தேர்தல் 30.12.2019 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன. மேற்படி அரசு மதுபானங்களை அரசுக்கு எதிராக மாவட்ட முழுவதும் மதுபானங்கள் விற்பனை செய்வதாக கிடைக்க பெற்ற தகவலின் படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சக்திவேல் அவர்களது தலைமையிலான குழு தேடுதலின் போது சில்லரை வியாபரம் செய்த 22 குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் அவர்களிடம் இருந்து சமார் 1200 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன .
திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா