திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தின் சார்பாக திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள குள்ளனம்பட்டி மற்றும் தாலுகா காவல்நிலைம எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் திரு.சுப்ரமணியன் மற்றும் உதவி ஆய்வாளர் திரு.சுந்தரம் அவர்களது தலைமையிலான நடந்த நகர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அரசுக்கு எதிரான மதுபானங்களை விற்ற 6 நபர்களான பொன்மாந்துறை மாயன் வயது 44, அனுமந்தராயன் கோட்டை பச்சையம்மாள் 65, சிறுமலை அண்ணாநகர் நாகராஜ் 31, பாலகிருஷ்ணாபுரம் சேகர் 47, நாயுடு தெருவை சேர்ந்த குமார் 42, குட்டத்து ஆவரம்பட்டியை சேர்ந்த பஞ்சுராஜ் 34 ஆகியோர் மதுபானங்களை அரசுக்கு எதிராக விற்ற குற்றத்திற்காக, கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா