திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நகர் போக்குவரத்துக் காவல் நிலையத்தில் (17.10.19) நடைபெற்ற நிகழ்ச்சியில் திண்டுக்கல் நகர் பகுதியில் வாகன நெரிசல் அதிகம் உள்ள இடங்களில் வாகனங்களை சீரமைக்கவும் , பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூட்ட நெரிசலை சீரமைக்கவும், பள்ளி குழந்தைகள் சாலையை கடக்கும்போது வாகனங்களை சீரமைக்கவும், வாகனங்களால் ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் விதமாகவும் 5 இருசக்கர ரோந்து வாகனங்களின் சேவையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.இரா.சக்திவேல் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் நகர் DSP திரு.மணிமாறன், தாலுகா DSP திரு.வினோத், மற்றும் போக்குவரத்து ஆய்வாளர் திரு.பிரகாஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.