திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் மீனாட்சி திருக்கல்யாணம் குறித்து முகநூலில் அவதூறு பரப்பிய பெரியார் திராவிட கழக நிர்வாகி வீர பிரபாகரனை திண்டுக்கல் நகர தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் திரு. தெய்வம் அவர்களது தலைமையில் உதவி ஆய்வாளர்கள் திரு.அழகு பாண்டி, திரு.சுந்தரம், ஏட்டு வனராஜன், சதீஷ் ஆகியோர் கொண்ட தனிப்படை காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் திரு.தெய்வம் அவர்கள் தலைமையில் காவலர்கள் நகர் பகுதியில் ரோந்து சென்றபோது AB நகரில் ஒரு வீட்டில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த முபாரக் அலி (53), சேக் அப்துல்லா (26), ஷேக் பரீத் (25) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ. 47,970 மதிப்புள்ள 279 புகையிலை பாண்டல்கள் பறிமுதல் செய்து மேலும் அதற்கு பயன்படுத்திய 3 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா