கடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன் ஷிப் வட்டத்தில் உள்ள மணிகண்டன் என்பவர் கழுத்தில் நாட்டு சணல் வெடியை சுற்றிக்கொண்டுஇ தனது மாமியார் வீட்டின் முன்பு உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு, மனைவியை தன்னிடம் அனுப்பி வைக்க கோரி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதைக் கண்ட மாமியார் கூச்சலிடவே அவ்வழியாக வந்த நெய்வேலி நகர முதன்மை காவலர் பாலச்சந்திரன் அவரிடம் கூறவே, வீட்டினுள் சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனை அடுத்து தகவல் அறிந்த நெய்வேலி நகர காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மணிகண்டனிடம் சாமர்தியமாக பேசியபடி அருகில் சென்றனர். பின்னர் அவனது குழந்தையை காட்டி மனதை மாற்ற முயற்சிகள் மேற்கொண்டனர். குழந்தையை பார்த்து மனம்மாறிய மணிகண்டன் அழுதபடியே தற்கொலை முயற்சியை கைவிட்டு, குழந்தையை தூக்கியதும், அவரது உடலில் இருந்த வெடிக்குண்டுகளை அகற்றிவிட்டு, உடல் முழுவதும் காவல்துறையினர் தண்ணீர் ஊற்றினர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது. உயிரை பணயம் வைத்து மணிகண்டனை காப்பாற்றிய முதன்மை காவலர் பாலச்சந்திரனை பொது மக்கள் பாராட்டி வருகின்றனர்.