தமிழக காவல்துறையில் 16 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், 5 பேர் புதிய மாவட்டங்களின் எஸ்.பி.க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருவல்லிக்கேணி துணை ஆணையர் திரு. சுகுனா சிங் தென்காசிக்கும், மதுரை பட்டாலியன் கமாண்டண்ட் திரு. ஜெயச்சந்திரன் கள்ளக்குறிச்சிக்கும், காஞ்சிபுரம் எஸ்.பி திரு.கண்ணன் செங்கல்பட்டுக்கும், திருச்சி துணை ஆணையர் திரு.மயில்வாகனன் ராணி பேட்டை மாவட்டத்துக்கும் எஸ்.பி.க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார், திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவள்ளுர் குழந்தை மற்றும் பெண்கள் குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. தில்லை நடராஜன், பொருளாதார குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்ட தலைமை அலுவலக, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. பாஸ்கரன், மதுரை மாநகர தலைமை அலுவலக காவல் துணை ஆணையராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகர தலைமை அலுவலக, காவல் துணை ஆணையராக இருந்த திரு. மகேஷ், சென்னை ஞ-பிரிவு சி.ஐ.டி பிரிவு காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஞ-பிரிவு சி.ஐ.டி பிரிவு காவல் கண்காணிப்பாளரான திரு.தாமோதரன், சென்னை மாநகர காவல்துறையின், திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்ட குழந்தை மற்றும் பெண்கள் குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. இளங்கோ, மதுரை 4வது பட்டாலியன் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர மாநகர காவல் கிழக்கு பயிற்சி மைய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. மகாபாரதி, சென்னை சி.பி.சி.ஐ.டி காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர மாநகர சி.பி.சி.ஐ.டி காவல் கண்காணிப்பாளராக இருந்த திருமதி.சாமுண்டிஸ்வரி, காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த திரு.கண்ணன், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு போலீஸ் அகாடமி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்த திரு.வேதரத்தினம், திருச்சி மாநகர காவல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
காவலர் பயிற்சி கல்லூரி காவல் கண்காணிப்பாளாராக இருந்த திரு.மணி, சென்னை அமலாக்கப்பிரிவு காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை அமலாக்கப்பிரிவு காவல் கண்காணிப்பாளராக இருந்த திரு.ராதாகிருஷ்ணன், சென்னை பெருநகர பாதுகாப்பு பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை பெருநகர பாதுகாப்பு பிரிவு துணை ஆணையராக இருந்த திரு.சுதர்சன், காவலர் பயிற்சி கல்லூரி காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.