சேலம் : கடந்த (19/9/22) முதல் (24/9/2022) வரை தலைநகர் டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான காவல்துறையினருக்கான ஐூடோ க்ளாஸ்டர் தொடரில் சேலம் மாவட்டம் மேட்டூர் காவல் நிலைய முதல் நிலைக் காவலர் திருமதி.இளவரசி மற்றும் நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை காவல் நிலைய பெண் தலைமை காவலர் திருமதி.அமுதா ஆகியோர் பென்காக் சிலாட் (சண்டை விளையாட்டு) போட்டியில் மூன்றாம் இடம் வென்றனர். அதேபோல் கடந்த (17/4/2018) முதல் (21.4.2018) வரை நடைபெற்ற தொடரில் நாமக்கல் மாவட்ட காவல் துறையை சேர்ந்த பெண் தலைமை காவலர் திருமதி.அருள்மொழி அவர்கள், கேக்வாண்டோ (தற்காப்பு கலை) போட்டியில் மூன்றாம் இடம் பெற்றார். அகில இந்திய அளவில் தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்த்த காவலர்கள் முன்னதாக (12/5/2023) அன்று சென்னையில் காவல்துறை இயக்குனர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து மற்றும் தலா 2 லட்சம் வெகுமதிக்கான காசோலை பெற்றனர். பின்னர் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சிவகுமார் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்