காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு வார ஓய்வு கொடுக்கப்பட வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் உத்தரவுப்படி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்னமும் நிறைய காவல் நிலையத்தில் வார ஓய்வு கொடுக்கப்படவில்லை. இந்த உத்தரவு வந்த ஒரு சில மாதங்களே காவலர்களுக்கு வார விடுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது வார விடுப்பு என்பது இல்லை. ஆள் இல்லை என்ற காரணத்தைச் சொல்லியே அவர்களுக்கு வார விடுப்பு கொடுக்க மறுக்கபடுவதாக கூறப்படுகிறது. காவலர்களுக்கு வார ஓய்வு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு காவலர்களின் நலனுக்காக காவலர்களுக்கு வார ஓய்வு அளிக்க காவல் உயர் அதிகாரிகளுக்கு காவலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழக காவல் உயர் அதிகாரிகள் இதை ஆவணம் செய்ய வேண்டும் என போலீஸ் நியூஸ் பிளஸ் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்
திரு.விஜயராஜ்