திண்டுக்கல் : தமிழகத்தில் சிறந்த இரண்டாம் இடம் பிடித்த திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி K. பழனிச்சாமி தமிழக அளவில் சிறந்த காவல் நிலையங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
இப்பட்டியலில் சிறந்த காவல் நிலையமாக திண்டுக்கல் மாவட்டம் நகர் வடக்கு காவல் நிலையம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. காவல்நிலைய ஆய்வாளர் உலகநாதன் அவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.சக்திவேல் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறும்போது, காவல் நிலையங்களில் செய்யப்படும் வழக்குப்பதிவுகள், குற்றவாளிகளை கண்டுபிடித்தல், அனைத்து பதிவுகளுக்கும் கணினியை பயன்படுத்துதல், எதிரிகளை கைது செய்தல், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது எண்ணிக்கை, குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவர்களை கைது செய்தது, கொலை குற்றங்களை விரைந்து கண்டுபிடித்தல், சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வழக்குகளை விரைந்து முடித்தல், காவல்நிலையத்தின் சுற்றுச்சூழல், குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளின் மேம்பாடு, பதிவேடுகளை சீரிய முறையில் பராமரித்தல் உள்ளிட்டவைகளின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்டம் நகர் வடக்கு காவல் நிலையம் 2வது இடத்தை பிடித்துள்ளது.
ஜனவரி 26ஆம் தேதி சென்னையில் நடக்கவிருக்கும் குடியரசு தின விழாவில் காவல் நிலைய ஆய்வாளர் அவர்கள் கலந்து கொண்டு சிறந்த காவல் நிலையத்திற்கான சான்றிதழை பெற உள்ளார்.
கோவை சி2 ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் முதலாம் இடத்தையும், தருமபுரி டவுன் காவல் நிலையம் 3 ஆம் இடத்தையும் பெற்றுள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா