தர்மபுரி: தர்மபுரி டவுன் காவல் நிலையம் மாநில அளவில் 3வது சிறந்த காவல் நிலையமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது தர்மபுரி காவலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்ட காவல்துறை 3 (தர்மபுரி, அரூர் , பென்னாகரம் )சப்-டிவிஷன்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
தர்மபுரி சப் டிவிஷனில் தர்மபுரி, அதியமான்கோட்டை காவல் நிலையம், தொப்பூர் காவல் நிலையம், மதிகோண்பாளையம் காவல் நிலையம், காரிமங்கலம் காவல் நிலையம், கிருஷ்ணாபுரம் காவல் நிலையம் என 6 காவல் நிலையங்களும், அரூர் சப் டிவிஷனில் அரூர் காவல் நிலையம், கோட்டப்பட்டி காவல் நிலையம், ஏ.பள்ளிப்பட்டி காவல் நிலையம், பாப்பிரெட்டிபட்டி காவல் நிலையம், பொம்மிடி காவல் நிலையம், கடத்தூர் காவல் நிலையம், கம்பைநல்லூர் காவல் நிலையம், மொரப்பூர் காவல் நிலையம் என 8 காவல் நிலையங்களும், பென்னாகரம் சப்-டிவிஷனில் பென்னகாரம் காவல் நிலையம், ஏரியூர் காவல் நிலையம், இண்டூர் காவல் நிலையம், பெரும்பாலை காவல் நிலையம், ஒகேனக்கல் காவல் நிலையம், மாரண்டஅள்ளி காவல் நிலையம், பாலக்கோடு காவல் நிலையம், மகேந்திரமங்கலம் காவல் நிலையம், பஞ்சப்பள்ளி காவல் நிலையம் என 10 காவல் நிலையங்களும் உள்ளன.
இது தவிர 3 சப்-டிவிஷன்களிலும் ஒரு மகளிர் காவல் நிலையங்களுமாக 27 காவல் நிலையம்கள் உள்ளன. இதில் 900க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பணியாற்றுகின்றனர்.
தர்மபுரி காவல் நிலையத்தில் ஆய்வாளராக திரு.ரத்னகுமார், 4 உதவி ஆய்வாளர்கள், 80 காவலர்கள் பணியாற்றுகின்றனர்.
இந்நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலையங்கள் செயல்பாடுகளின் அடிப்படையில், சிறந்த காவல் நிலையங்களில் தமிழகத்தில் 3வது சிறந்த காவல் நிலையமாக தர்மபுரி டவுன் காவல் நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறையினர் கூறும்போது, காவல் நிலையங்களில் செய்யப்படும் வழக்குப்பதிவுகள், குற்றவாளிகளை கண்டுபிடித்தல், அனைத்து பதிவுகளுக்கும் கணினியை பயன்படுத்துதல், எதிரிகளை கைது செய்தல், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது எண்ணிக்கை, குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவர்களை கைது செய்தது, கொலை குற்றங்களை விரைந்து கண்டுபிடித்தல், சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வழக்குகளை விரைந்து முடித்தல், காவல்நிலையத்தின் சுற்றுச்சூழல், குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளின் மேம்பாடு, பதிவேடுகளை சீரிய முறையில் பராமரித்தல் உள்ளிட்டவைகளின் அடிப்படையில் தர்மபுரி டவுன் காவல் நிலையம் 3வது இடத்தை பிடித்துள்ளது.
வரும் 26ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் டவுன் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ரத்னகுமார் விருதை பெற உள்ளார் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. M. தீபான்சி
தேசிய பொது செயலாளர்
NAI – சமூக சேவை குடியுரிமை நிருபர்கள் பிரிவு
சேலம்