திருப்பூர் : திருப்பூர் பாளையக்காடு, சூர்யா நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ்.(26). இவர் அதே பகுதியில் மளிகைக் கடை வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை, என்.ஆர்.கே புரத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் சூர்யா நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுளனர். அவர்களை தடுத்து நிறுத்திய ராஜேஷ், குழந்தைகள் இருக்கும் பகுதியில் ஏன் இவ்வளவு வேகமாக பைக் ஒட்டி செல்கிறீர்கள் என கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுவர்கள் தங்கள் பகுதியில் உள்ள மேலும் சிலருடன் அரிவாள், கம்பி போன்ற ஆயுதங்களுடன் வந்து, ராஜேஷை தாக்கியுள்ளனர் இதுகுறித்து அப்பகுதி மக்கள் திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட ஐந்து சிறுவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர். வெட்டு காயங்களுடன் ராஜேஷ் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.