திண்டுக்கல் : திண்டுக்கல் பழனி ரெட்டியார்சத்திர காவல் நிலையத்திற்கு உட்பட்ட கதிரேசன் பட்டி கிராமத்தில் வசித்து வந்த ராமசாமி என்பவரை, அவரது அண்ணன் மகன் மாரிமுத்து என்பவரும், மாப்பிள்ளை அழகர்சாமி என்பவரும் சொத்து தகறாரில் ராமசாமி என்பவரது இடது கையினை அரிவாளால் வெட்டி அவரது கைவிரல்கள் அசைவற்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதன் காரணமாக சுமார் ஒரு மாதமாக தேடப்படும் குற்றவாளிகளாக மாரிமுத்து மற்றும் அழகர்சாமி ஆகிய இருவரும் தலைமறைவாக இருந்தனர்.
இதனை விசாரித்த ரெட்டியார்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.சிவராஜா மற்றும் பயிற்சி ஆய்வாளர் திரு.டேவிட் அவர்கள் தனிப்படை அமைத்து குற்றவாளிகள் இருக்கும் இடத்தை கண்டறிந்து அவர்களுக்கு 307 வழக்கின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்து விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா