மதுரை : மதுரை மாவட்டம். நாகமலை புதுக்கோட்டை, முனியாண்டி கோவில் அச்சம்பத்து அருகே பூமிநாதன் என்பவருக்கு சொந்தமான டீக்கடையில், அதே ஊரை சேர்ந்த குணா (எ) குணசேகரன் (29) என்பவர் பூமிநாதன் கடையில் சிகரெட் பாக்கெட் ஓசியாக கேட்டுள்ளார். தர மறுத்த கடை உரிமையாளரை அசிங்கமாக பேசி,கொலை மிரட்டல் விடுத்து, கடைக்கு தீ வைத்து எரித்து விட்டதாக, பூமிநாதன் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மேற்படி நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்