விழுப்புரம் : புதுச்சேரியை அடுத்த விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த பாலகிருஷ்ணன் மற்றும் அவரது கூட்டாளியான ஆறுமுகம் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர் விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அடுத்த திருச்சிற்றம்பலம் பகுதியை சேர்ந்த சசிகுமார் என்பவரது வீட்டின் பின்புறம் கதவினை உடைத்து உள்ளே புகுந்து திரு சசிகுமாரின் தாயார் கழுத்தில் அணிந்து இருந்த தங்க சங்கிலியை கத்தியைக் காட்டி மிரட்டி பரித்து கொண்டு அதனுடன் அவர்களின் வீட்டில் 39 சவரன் தங்க நகைகளை பரித்து கொண்டு சென்றுள்ளனர் இதுகுறித்து திரு சசிகுமார் அவர்கள் ஆரோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அவர்கள் புகாரின் அடிப்படையில் தனிப்படை அமைத்து போலீசார் கொள்ளையனை தேடி வந்தனர் இதற்கு இடையில் ஆரோவில் சாலையில் உள்ள தனியார் விடுதியில் திருட முயன்ற புதுச்சேரி கணிக்கலாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவனை பிடித்து விசாரித்தனர் அந்த விசாரணையில் அவன் கடந்த ஒருவருட காலமாக ஆரோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தனியாக உள்ள வீடுகளை நோட்டம் விட்டு வீட்டின் முன் பக்க கதவினை பூட்டி விட்டு வீட்டின் பின்புறம் உள்ள கதவினை உடைத்து கொள்ளை அடிப்பதை தொடர் வாடிக்கையாக கொண்டிருந்தது தெரியவந்தது அதுமட்டுமின்றி திருச்சிற்றம்பலம் பகுதியில் உள்ள திரு சசிகுமாரின் வீட்டின் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட தும் இவர் தான் என்பது CCTV காட்சிகளின் மூலமாக தெரியவந்தது இவர் டவுசர் மற்றும் மங்கி குல்லா அனிந்து கத்தியைக் காட்டி திருடுவதை பாணியாக கொண்டுள்ளார் இவருக்கு நகைகளை விற்று கொடுப்பதில் உடைந்தையாக இருந்த வேலூரை சேர்ந்த ஆறுமுகம் என்பவனும் கைது செய்யப்பட்டு உள்ளான் இவர்களிடம் இருந்து சுமார் 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 50 சவரன் தங்க நகைகளை நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர் DSP திரு அஜய் தங்கம் அவர்கள் தலைமையிலான சிறப்பு உதவி ஆய்வாளர் திரு K.V. பாலமுருகன் மற்றும் அவரது குழுவினரை விழுப்புரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை சிறப்பாக செயல்பட்டு பிடித்தமைகாக பாராட்டினார்.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.சதீஸ் குமார்