சிறைக் கைதிகளை கொண்டு தொடங்கப்பட்டுள்ள பிரட் தயாரித்து விற்பனை செய்வது, பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சிறை கைதிகளுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தித்தரும் முயற்சியாக சேலம் மத்திய சிறையில் பிரட் தயாரிக்கும் சிறிய அளவிலான தொழிற்சாலை நிறுவப்பட்டுஇ அங்கு கைதிகள் தயாரிக்கும் பிரட்டுகள், சிறைக்கு வெளியில் உள்ள கடையில் விற்கப்பட்டுவருகிறது. மேலும் 2 டன் பிரெட்டுகளை சேலம் அரசு மருத்துவமனைக்கு மாதந்தோறும் வழங்க சிறைத்துறை நிர்வாகம் முடிவுசெய்துள்ளது.
அந்த வகையில் பன் 5 ரூபாய்க்கும், பிரட் வகைகள் 25 ரூபாய்க்கும்இ தேங்காய் பன் 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையேஇ சிறையில் அதிக அளவில் பிரெட்டுகள் உற்பத்தி செய்யப்படுவதால்இ பிரெட் விற்பனையை அதிகப்படுத்த முடிவெடுத்துள்ள சிறைத் துறை நிர்வாகம் முடிவுசெய்துள்ளது.
அதன்படி, 200 கிராம் பிரெட்டின் விலை 12 ரூபாய் 50 பைசாவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாதந்தோறும் கிடைக்கவுள்ள ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வருவாயிலிருந்து குறிப்பிட்ட ஒரு தொகையை, பிரெட் தயாரிக்கும் கைதிகளுக்கு வழங்கவும் சிறை நிர்வாகம் முடிவுசெய்துள்ளது.
சிறைக் கைதிகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது என்றும்இ இதன்மூலம் பொதுமக்களுக்கும் கைதிகளுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட வாய்ப்பாக அமைந்துள்ளதாக சிறைதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.