நாகப்பட்டினம் : ஆன்லைன் மோசடியில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சிக்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என நாகப்பட்டினம் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம். இகாப அவர்கள் நாகப்பட்டினம் மாவட்ட பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்கள்.
உலகிலே அதிவேகமான நாகரீக வளர்ச்சியின் காரணமாக ஆன்லைன் மோசடிகள் தற்போது அதிகரித்துள்ளது தற்போது நம்மில் பெரும்பாலானோருக்கு நமது டெபிட் கார்டின் நம்பர், பின் நம்பர் கேட்டு வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி போன் வந்திருக்கும். விவரமானவர்கள் தப்பியிருப்போம். அந்த விவரம் இல்லாதவர்களில் பலர் பல ஆயிரங்களையும் சிலர் சில லட்சங்களையும் கூட இழந்திருப்பார்கள்.
சொன்னா வெக்கக்கேடு. சொல்லாட்டி மானக்கேடு, என புலம்பியபடியே, இனியாவது சுதாரிப்பாக இருப்போம் என மனதை தேற்றிக் கொள்பர்கள்தான் பலர். ஏமாற்றுபவர்கள் பல அடுக்குகளை ஏற்படுத்தி இருப்பார்கள் என்பதால், அவர்களை நெருங்கவே முடியாது. நெருங்கினாலும் பணத்தை திரும்ப வாங்க முடியாது.
வங்கி பணப் பரிமாற்றம், பொருட்கள் வாங்குவது, போன், டி.வி. போன்றவற்றுக்கு ரீசார்ஜ் செய்வது என பல விஷயங்களை நாம் ஆன்லைன் மூலமே செய்து கொள்கிறோம்.என நாகப்பட்டினம் மாவட்ட காவல கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம். இகாப அவர்கள் தெரிவித்துள்ளார்
மேலும் ஆசிய – பசிபிக் நாடுகளுடன் ஒப்பிடும்போது, ஸ்மார்ட் போன் மூலம் ஆன்லைன் பரிமாற்றங்களை அதிகம் செய்வதில் இந்தியர்கள்தான் முதலிடத்தில் உள்ளனர்.
அதேபோல் ஆன்லைன் மோசடிக்கு பலியாகி ஏமாறுவதிலும் இந்தியர்கள் தான் முதலிடம். ஏறக்குறைய 24 சதவீத இந்தியர்கள் ஆன்லைன் மோசடியால் ஏமாற்றப்பட்டுள்ளதாக எஸ்பீரியன் அண்ட் ஐடிசி என்ற அமைப்பின் ஆய்வு தெரிவிக்கிறது. டெலிகாம் நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் ஆன்லைன் ரீடெய்லர்கள் தொடர்பாகத்தான் பெரும்பாலான மோசடிகள் நடக்கின்றன.
இந்த அமைப்பு ஆஸ்திரேலியா, சீனா, ஹாங்காங், இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், நியூஸிலாந்து, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் நாடுகளில் இந்த ஆய்வை நடத்தியுள்ளது. இதில்தான் இணையதள மோசடிகளில் இந்தியர்கள் அதிகம் ஏமாறுவது தெரிய வந்துள்ளது.
மேலும் இணையதளங்களில் ஏறக்குறைய 51 சதவீத இந்தியர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை பகிர்ந் கொள்ள கொஞ்சம் கூடத் தயங்குவதில்லையாம். பேரு, ஊரு, வயசு, சம்பளம், ஆணா, பெண்ணா, போன் நம்பர், கார் இருக்கா, பைக்கா, சொந்த வீடு இருக்கா, வாடகை வீடா, கல்யாணம் ஆச்சா, சிங்கிளா என ஒன்றுவிடாமல் அனைத்து விவரங்களையும் சொல்லி விடுகிறார்களாம்.
இப்படி ஒளிவுமறைவு இல்லாமல் வெள்ளந்தியாக இருப்பதால், நான்கில் ஒரு வாடிக்கையாளர் ஏதாவது ஒரு விதத்தில் ஏமாற்றப்படுவதாகத் தெரிவிக்கிறது அந்த ஆய்வு. வெறும் 6 சதவீதம் பேர் மட்டுமே தங்களைப் பற்றிய விவரங்களை தேவையில்லாமல் யாருக்கும் தெரிவிப்பது இல்லையாம்.
எனவே நமக்குத் தெரிந்தவரையில் இதுபோன்ற மோசடிகள் நாள்தோறும் நடந்து கொண்டேதான் இருக்கிறது. அப்பாவி பொதுமக்கள் ஏமாந்து கொண்டேதான் இருக்கிறார்கள். வங்கிகளும் டெலிகாம் நிறுவனங்களும் மற்றும் காவல் துறையினரும் எவ்வளவோ இதுபோன்ற விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வந்தபோதிலும் அதற்கு பலனில்லை என்பதற்கு இதுபோன்ற சம்பவங்களே உதாரணம்.
மேலும் இது போன்ற சம்பவம் நடை பெறாமல் இருக்க நாகப்பட்டினம் மாவட்ட பொது மக்கள் விழிப்புணரவுடன் இருக்க வேண்டும். எனவும் மேலும் இது போன்ற ஆன்லைன் மோசடி தொடர்பாக அழைப்புகள் வந்தாளே அது தொடர்பாக கீழ்கண்ட தொலைபேசி எண்களில்
100,
9498100905,
8939602100,
7997700100,
04365242999,
04365248119,
24 க்கு மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் எனவும் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் கேட்டுகொண்டர்கள்.