சென்னை: நசரத்பேட்டை பகுதியைச் சேர்ந்த தலைமைக்காவலர் சங்கர் 40 என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் மாங்காடு, மலையம்பாக்கம் பைபாஸ் சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது,
அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் மேற்படி தலைமைக்காவலர் சங்கரின் செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். மேற்படி சம்பவம் குறித்து சங்கர் T14 மாங்காடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
T14 மாங்காடு காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை மேற்கொண்டு, செல்போன் பறிப்பில் ஈடுபட்ட ஸ்டீபன் 19மாங்காடு என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது. மேற்படி நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
