சென்னை : தமிழகத்தில் இன்று மாலை துவங்கி நாளை கரையை கடக்க உள்ள நிவர் புயலின் தாக்கத்தை சமாளிக்கவும் பொதுமக்களையும் அவர்களின் உடமைகளையும் பாதுகாக்கவும் தமிழக அரசு அனைத்து துறைகளையும் முடக்கிவிட்டு தயார்நிலையில் வைத்துள்ளது. அதன்படி தமிழ்நாடுகாவல் துறையின் கடலோரப்பாதுகாப்பு குழுவினர்கள் மீட்பு பணியில் தமிழகம் ஈடுபட்டுவருகின்றனர்கள்.
சென்னை மெரினா கடற்கரையையொட்டி இயங்கிவரும் காவல்நிலையத்தில் தமிழ்நாடு காவல் துறை கூடுதல் இயக்குனர் திரு.வன்னியபெருமாள் ஐபிஎஸ் அவர்களின் ஆணைக்கிணைங்க காவல்துறை கண்காணிப்பாளர் சின்னச்சாமி ஐபிஎஸ் அவர்களின் அறிவுறுத்தலின்படி, டிஎஸ்பி பாலமுருகன் மேற்பார்வையில், ஆய்வாளா் இராஜேந்திரன் தலைமையில் மீட்புக்குழுவினர்கள் எந்நேரமும் தயார் நிலையில் உள்ளனர்கள்.
எண்ணூரில் துவங்கி ஆரப்பாக்கம் ,பழவேற்காடு, மெரினா முட்டுக்காடு கோவளம் வரை உள்ள கடற்கரையில் உள்ள மீனவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட உள்ளனர்கள். இக்குழுவில் நான்கு காவல்நிலையங்களுக்கு உட்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட மீட்பு பயிற்சிப்பெற்ற காவலர்கள் , ஓம்காட்ஸ்,மற்றும் மீனதன்னார்வ இளைஞர்கள் உள்ளனர்கள். இவர்களுடன் பாதுகாப்பு மீட்பு உபகரணங்களான சிறுபடகுகள் மிதவைகள் உருளைகள் , ரப்பர்டியூப் ,உடலில் கட்டிக்கொள்ளும் காற்றுஅடைப்பான் டியூப் பேட்டரி மின்விளக்குகள் உள்ளன. அவசர உதவிக்கு 1093 என்ற இலவச தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளனர்கள்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.சாஹித் உசேன்
மாநில தலைவர்
இளம் குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேசன் ஆப் இந்தியா