சென்னை : சென்னையில் 21,358 CCTV கண்காணிப்பு கேமராக்கள் போக்குவரத்து காவல்துறை சார்பாக பொருத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. TASMAC நிறுவனம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மூலமாக 66 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் போக்குவரத்து காவல் தெற்கு மாவட்ட எல்லைக்குட்பட்ட இடங்களான GST ரோட்டில் 19 இடங்களிலும், அண்ணா சாலையில் இரண்டு இடங்களிலும் பொருத்தப்பட்டுள்ளது. இதை தவிர பொது மக்களின் உதவியுடன் 22 கேமராக்கள் காமாட்சி மேம்பாலம் இணைப்புச் சாலை மற்றும் காமாட்சி மேம்பாலத்தில் நிறுவப்பட்டுள்ளன. இவற்றை கண்காணிப்பதற்கு கண்காணிப்பு கட்டிடம் ஒன்றும், நெடுஞ்சாலை துறை மற்றும் பொது மக்கள் உதவியுடன் நிறுவப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் காவல் ஆய்வாளர், காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவல் ஆளினர்கள் உபயோகப்படுத்த போதுமான வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுவோரின் வழக்கு சம்பந்தமான வாகனங்களை பறிமுதல் செய்து அவற்றை இந்த கட்டிடத்தின் அருகில் நிறுத்தி வைக்க இட வசதியும் அவைகளை கண்காணிக்க CCTV- யும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் சுய சமநிலை மோட்டார் சைக்கிள் (Self Balancing scooter) ரூபாய் 1.25 இலட்சம் செலவில் போக்குவரத்து காவல் துறைக்கு இன்று DLF நிறுவனத்தினரால் வழங்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட வசதிகளை நேற்று மரியாதைக்குரிய சென்னை மாநகர காவல் ஆணையாளர் அவர்கள், போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையாளர் அவர்கள் மற்றும் போக்குவரத்து காவல் இணை ஆணையாளர் அவர்கள் மற்றும் போக்குவரத்து காவல் இணை ஆணையாளர் (தெற்கு ) ஆகியோர்கள் முன்னிலையில் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்கள்.
கொரோனா வைரஸ்
மதிப்பிற்குரிய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் அறிவுரைகளின் படி அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் காவல் உதவி ஆணையாளர் அலுவலகம் ஆகிய இடங்களில் கிருமி நாசினி கொண்டு தங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து தெற்கு மாவட்டத்தில் 23 இடங்களில் ஒலிபெருக்கி மூலம் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. இவை தவிர தியாகராயநகர் போக்குவரத்து உட்கோட்டத்தில் காணொலி மூலம் விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது. இன்று முதல் ராஜிவ் காந்தி சாலையில் டைடல் பார்க் சந்திப்பு அருகில் காணொலி மூலம் விழிப்புணர்வு நடத்தப்பட உள்ளது. மேலும் இரண்டு , நான்கு சக்கர வாகனங்கள் மூலம் கொரோனா வைரஸ் சம்பந்தமான விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யும் வசதியை காவல் ஆணையாளர் அவர்கள் துவக்கி வைத்துள்ளார். கண்காணிப்பு கட்டிடம் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள்(22) ஆகியவற்றை நிறுவிய காவல் ஆய்வாளர் திரு. சிவசங்கரன் மடிப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலையம் மற்றும் காவல் உதவி ஆணையாளர் திரு. அன்வர் பாஷா, புனித தோமையர் மலை போக்குவரத்து உட்கோட்டம், ஆகியோர்களை காவல் ஆணையாளர் மற்றும் காவல் உயரதிகாரிகள் பாராட்டினர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்
வண்ணாரப்பேட்டை