மதுரை : மதுரை மாநகரில் உள்ள எம். ஜி. ஆர். விளையாட்டு மைதானத்தில் கடந்த14.10.2019 ந்தேதி நடைபெற்ற காவலர்களுக்கான தடகள போட்டியை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.
இப்போட்டிகள் மூன்று நாட்கள் (14.10.2019-16.10.2019) நடைபெற்றன. தடகள போட்டிகளில் வெற்றிபெற்ற சென்னை மாநகர அணிக்கு நேற்று சாம்பியன் பட்டத்தை தென்மண்டல காவல்துறை தலைவர் திரு. சண்முக ராஜேஸ்வரன் IPS., அவர்களால் வழங்கப்பட்டது.
இப்போட்டிகளில் 7 மண்டலத்தை சேர்ந்த 478 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்துகொண்டனர். புதிய சாதனை படைத்தவர்களுக்கு ரூ. 10000/- பரிசுத்தொகை, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. இப்போட்டிகளில் வெற்றிபெற்றவர்கள் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளிலும் கலந்து கொள்வார்கள்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை