சென்னை : சென்னை பெருநகரக காவல் ஆணையாளர் அவர்கள், சென்னை பெருநகரில் பணிபுரியும் காவல் ஆளிநர்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் தடுக்க, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில், “Tianno Water Sanitization” நிறுவனத்தால் “Chloro-Sanitizer” என்ற திரவ சுத்திகரிப்பான் தயாரிக்கும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தில் உப்பு கலந்த தண்ணீரில் மின்சாரம் பாய்ச்சப்பட்டு திரவ சுத்திகரிப்பான் தயாரிக்கப்படுகிறது.
இந்த இயந்திரத்தில் 25 லிட்டர் தண்ணீர் மற்றும் உணவிற்கு பயன்படுத்தப்படும் 750 கிராம் உப்பு சேர்த்து 8 மணி நேரத்தில் 25 லிட்டர் திரவ சுத்திகரிப்பான் தயாரிக்கப்படுகிறது. 25 லிட்டர் திரவ சுத்திகரிப்பானில் 2 ஆயிரம் லிட்டர் தண்ணீர் சேர்த்து அதனை கொரோனா கிருமி நாசினியாக பயன்படுத்தலாம்.10.04.2020 அன்று காலை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் திரவ சுத்திகரிப்பான் இயந்திரத்தின் பயன்பாட்டை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் திரு.எச்.எம்.ஜெயராம், இ.கா.ப., (தலைமையிடம்), இணை ஆணையாளர் திரு.ஏ.ஜி.பாபு, இ.கா.ப, (தலைமையிடம்) மற்றும் நுண்ணறிவுப்பிரிவு துணை ஆணையாளர்கள் திரு.திருநாவுக்கரசு, இ.கா.ப, திரு.சுதாகர் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.
நமது குடியுரிமை நிருபர்

S. அதிசயராஜ் சென்னை