சென்னை: கி.பி. 1800 ஆம் ஆண்டு சென்னை, புதுப்பேட்டையில் ஒரு கட்டிடம் குதிரைப்படைக்காக கட்டப்பட்டது. இக்கட்டிடத்தின் மேல் தளத்தில், குதிரைப்படையின் தலைமை அதிகாரிகள் இருப்பிடமாகவும், கீழ் பகுதி நிர்வாக அலுவலகம் மற்றும் குதிரைகளில் தீவன கிடங்குடன் அமைக்கப்பட்டது.
இக்கட்டிடத்தை ஒட்டி உயரதிகாரிகளின் 12 குதிரைகள் வைக்கப்பட்டிருந்தன, இக்கட்டிடத்தின் கடைசி பகுதியில் கவர்னர்க்கான கோச் வண்டி நிறுத்தமிடமாகவும் இருந்துள்ளது. இவை அனைத்தும் ஆவனப்படி கடந்த 50 ஆண்டுகளாக சீரமைப்பு ஏதுமின்றி மிகவும் பழுதுபட்ட நிலையில் கட்டிடத்தில் ஸ்திரத்தன்மை மட்டும் குறையாமல் இருந்தது.
இக்கட்டிடத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவின்படி, இக்கட்டிடம் புனரமைக்கப்பட்டு 03.12.2019 அன்று சென்னை புதுப்பேட்டையிலுள்ள குதிரைப்படை புதுப்பிக்கப்பட்ட நிர்வாக கட்டிடத்தில் நன்றியுடன் திறப்பு விழாவில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் திறந்து வைத்தார்.