சென்னை : காவலன் SOS செயலி குறித்த விழிப்புணர்வு சென்னை சூரப்பேட்டை, பாரதிதாசன் தெருவில், சூரப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் திரு. எஸ். விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது. காவல் உதவி ஆய்வாளர் திரு எஸ் விஜயகுமார் காவலன் செயலி குறித்து தெளிவாக தெளிவாக எடுத்துரைத்தார். இதில் அப்பகுதியில் உள்ள சுமார் 60 பெண்கள் கலந்துகொண்டனர். சென்னை காவல்துறையினரின் சீரிய விழிப்புணர்வால், கடந்த 15 நாட்களில் சுமார் மூன்று இலட்சம் பேர் காவலன் செயலியை பதிவிறக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
அனைவரும் தங்கள் ஆன்ராய்டு தொலைபேசியில் காவலன் செயலியை பதிவிறக்கம் செய்து, அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று கற்றுக் கொண்டனர். அதை அவசர காலங்களில் பயன்படுத்துவதாக உறுதியளித்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
S. வீரமணி
குடியுரிமை நிருபர்