சென்னை : சென்னை பெருநகர காவல் துறையினரின் நலனை கருத்தில்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப ., அவர்கள் செயல்படுத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாக சென்னை, புதுப்பேட்டை, காவலர் குடியிருப்பில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், கூடுதல் காவல் ஆணையாளர் (தலைமையிடம்) அவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் குடியிருப்பை சில மாதங்களுக்கு முன் பார்வையிட்ட போது, காவலர் குடும்பத்தினர் சிறுவர் பூங்கா அமைக்குமாறு கோரிக்கை விடுத்தனர். காவலர் குடும்பத்தினரின் நலனை கருத்தில் கொண்டு, உடனடி நடவடிக்கை எடுத்து காவல் துறையினரின் குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்காகவும், உடற்பயிற்சி மற்றும் பொழுது போக்கிற்காகவும் புதுப்பேட்டை காவலர் குடியிருப்பு வளாகத்தில் ரூ.7 லட்சம் செலவில் புதிதாக சிறுவர் பூங்கா, திறந்த வெளி உடற்பயிற்சி கூடம், மற்றும் 8 வடிவிலான நடை பயிற்சி நடை பாதை அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் இன்று (28.12.2020) மாலை புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவை திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் காவல் ஆணையாளர் அவர்கள் பூங்காவில் மரக்கன்று ஒன்றை நட்டு சிறுவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் முனைவர் திரு.A.அமல்ராஜ், இ.கா.ப., (தலைமையிடம்), இணை ஆணையாளர்கள் திரு.R.சுதாகர், இ.கா.ப, (மேற்கு) திருமதி.S.மல்லிகா, இ.கா.ப, (தலைமையிடம்), துணை ஆணையாளர்கள் திரு.பெரோஷ்கான் அப்துல்லா, (நிர்வாகம்) திரு.K.சௌந்தராஜன், (ஆயுதப்படை-1) திரு.R.ரவிச்சந்திரன் (ஆயுதப்படை-2) திருS.கோபால் (மோட்டார் வாகனப்பிரிவு) காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் மற்றும் காவலர் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்