சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்த ரோந்து வாகனத்தில் புகார் மனு அளிக்கும் திட்டத்தில் இன்று 76 மனுக்கள் பெறப்பட்டு, மனு ஏற்பு ரசீது வழங்கி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கிடவும், குற்றங்களை தடுக்கவும் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, காவல் நிலையம் வர இயலாத பொதுமக்கள் தினமும் அறிவிக்கப்பட்ட நேரங்களில் அறிவிக்கப்பட்ட இடங்களில் நிறுத்தப்படும் காவல் ரோந்து வாகனத்தில் புகார் மனு அளிக்கும் திட்டத்தை 04.11.2020 துவக்கி வைத்தார்.
அதன்பேரில், இத்திட்டத்தின் முதல் நாளான நேற்று (05.11.2020) சென்னை பெருநகரிலுள்ள 124 காவல் நிலைய சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் அந்தந்த காவல் நிலைய சரகத்தில் அறிவிக்கப்பட்ட இடங்களில் நிறுத்தப்பட்டிருந்தன. அவசர உதவி, சிறு பிரச்சனைகள் மற்றும் காவல் நிலையம் செல்ல இயலாத பொதுமக்கள் என 76 நபர்கள் இன்று (05.11.2020) ரோந்து வாகனங்களில் புகார் மனுக்கள் அளித்தனர். மேற்படி 76 மனுக்கள் மீது உடனடியாக மனு ஏற்பு ரசீது வழங்கப்பட்டு, அம்மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. மேலும், சில மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நேற்று (05.11.2020) மாலை சுமார் 04.00 மணியளவில், P-1 புளியந்தோப்பு காவல் நிலைய ரோந்து வாகன பொறுப்பு அதிகாரி/உதவி ஆய்வாளர் மார்ட்டின் மைக்கேல் என்பவர் ரோந்து வாகன பணியிலிருந்தபோது, கன்னிகாபுரத்தில் வசிக்கும் சுமார் 65 வயது மதிக்கத்தக்க சுகுனாம்மாள் என்ற மூத்த குடிமக்கள் தன்னையும், தனது வயதான கணவரையும், தங்களது மகன் சரியாக பராமரிப்பதில்லை என அளித்த புகாரை உதவி ஆய்வாளர் பெற்று புகார் மனு ஏற்பு ரசீது வழங்கி தானே புகார்தாரர் சுகுனாம்மாள் வீட்டிற்கு புகார்தாரரின் மகனை அழைத்து வயதான பெற்றோரை பராமரிக்காமலும், உணவளிக்காமலும் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். உடனே, அவரது மகன் இனி தனது பெற்றோரை நன்கு பராமரிப்பதாக உறுதியளித்ததுடன், இனி இவ்வாறு செய்யமாட்டேன் என எழுத்து மூலம் உறுதியளித்தார்.
பின்னர் உதவி ஆய்வாளர் மார்ட்டின் மைக்கேல் புகார்தாரரிடம் எந்த பிரச்சனையாக இருந்தாலும் அவரது செல்போன் எண்ணுக்கு அழைக்கும்படி கூறிவிட்டுச் சென்றார். உடனே, மூத்த குடிமக்களான சுகுனாம்மாள் தனது மனு மீது விரைந்து நடவடிக்கை எடுத்தமைக்காக நன்றி தெரிவித்தார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.சாஹித் உசேன்
மாநில தலைவர்
இளம் குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேசன் ஆப் இந்தியா