சென்னை: பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் கோட்டூர்புரம் காவலர் குடியிருப்பு, சிந்தாதிரிப்பேட்டை காவல் சிறார் மன்றம், புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகம் மற்றும் மாம்பலம் காவலர் குடியிருப்பில் 15.01.2020 அன்று காவலர்கள் குடும்பத்தினருடன் பொங்கல் விழா கொண்டாடினார்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் 15.01.2020 அன்று மதியம் கோட்டூர்புரம் காவலர் குடியிருப்பில் காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் பொங்கல் திருநாள் கொண்டாடினார்.
பின்னர் சிந்தாதிரிப்பேட்டை காவல் சிறார் மன்றம், புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகம் மற்றும் மாம்பலம் காவலர் குடியிருப்பில் காவல் ஆளிநர்கள் மற்றும் காவலர்கள் குடும்பத்தினருடன் பொங்கல் விழா கொண்டாடினார். காவலர் குடும்பத்தினரைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர்கள் மற்றும் காவலர்களுக்காக நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளை காவல் ஆணையாளர் மற்றும் உயர் அதிகாரிகள் கண்டு ரசித்தனர். பின்னர், இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் பரிசுகள் வழங்கிப் பாராட்டி அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையாளர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா, இ.கா.ப, (தெற்கு), இணை ஆணையாளர்கள் திரு.ஆர்.சுதாகர், இ.கா.ப, (கிழக்கு மண்டலம்), திருமதி.சி.மகேஸ்வரி,இ.கா.ப., (தெற்கு மண்டலம்), திருமதி.சி.மகேஸ்வரி,இ.கா.ப., திரு.ஏ.ஜி.பாபு,இ.கா.ப., (தலைமையிடம்), காவல் துணை ஆணையாளர்கள், காவல் அதிகாரிகள் காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.