சென்னை : சென்னையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலருக்கு நோய்த்தொற்று அதிகளவில் பரவி வருகிறது. அதன்படி 20 காவலர்களுக்கு நோய்த்தொற்று உறுதியானது. இவர்களை சுகாதாரத் துறை அதிகாரிகள் மீட்டு ஐஐடி மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள கொரானா வார்டில் அனுமதித்து உள்ளனர். மேலும் அவருடன் பணியாற்றிய சக காவலர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர்.
சென்னை மாநகர காவல் துறையில் இதுவரை 491 காவலர்கள் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் கூடுதல் ஆணையர், இரண்டு துணை ஆணையர்கள் உட்பட 169 பேர் நோய் தொற்றிலிருந்து குணமாகி பணியில் உள்ளனர். இந்த வகையில் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வேப்பேரி காவல் நிலையத்தில் பணிக்குத் திரும்பிய 2 தலைமை காவலர்களுக்கு பூங்கொத்து கொடுத்து காவல்துறையினர் வரவேற்றனர்.
சென்னையில் ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர் முதல் உயர் அதிகாரிகள் வரை பலர் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் குணமடைந்த காவல்துறையினர் மீண்டும் பணியில் சேர்ந்து வருகின்றனர். அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து சென்னை மாநகர ஆணையர் வரவேற்று வருகிறார். ராஜமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தலைமை காவலர் திரு. டெல்லி அவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஏற்பட்டது. தொடர் சிகிச்சையில் குணமடைந்த அவர் நேற்று பணிக்கு திரும்பினார். அவருக்கு அண்ணாநகர் காவல் துணை ஆணையர் திரு.முத்துச்சாமி, ஆய்வாளர் திரு.ராஜ்குமார் மற்றும் காவலர்கள் அனைவரும் பேண்ட் வாத்தியங்கள் முழங்க மாலை அணிவித்து வரவேற்றனர். மேலும் அவருக்கு சென்னை காவல் ஆணையரின் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்
S. அதிசயராஜ்
சென்னை