சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் கஞ்சா பொட்டலங்களை டோர் டெலிவரி செய்யும் கும்பலைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட கார்த்திக், காமேஷ் ஆகியோரிடம் இருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கல்லூரி மாணவர்கள், தனியார் நிறுவன ஊழியர்களிடம் செல்போனில் ஆர்டர் எடுத்து ரூ.100-க்கு கஞ்சா விற்பனை செய்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.