திருவள்ளூர்: சென்னையிலிருந்து சூலூர் பேட்டை ரயிலில், நந்தியம்பாக்கம் மீஞ்சூர் அனுப்பம்பட்டு, அத்திப்பட்டு, பொன்னேரி, எண்ணூர் பகுதியிலிருந்து 25 கிலோ பையில் இரயிலின் சீட்டு அடியில் பதுக்கி வைத்து, ஆந்திராவில் கொண்டு சென்று, அங்கு அதிக விலைக்கு விற்று வருவதாக, பொன்னேரி வட்ட வழங்கல் அதிகாரி தனுஜா டயானாவுக்கு தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் சென்னை சூளூர்பேட்டை ரயிலில் சோதனை செய்ததில் மூட்டை மூட்டையாக பெட்டிகளில் அரிசி இருப்பது தெரிய வந்தது. பின்னர் அவற்றை கைப்பற்றி மொத்தம் 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவை தச்ச்சூர் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.
திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்