செங்கல்பட்டு : காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த திரு. D.கண்ணன் அவர்கள், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று காலை காஞ்சிபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் திரு. D.கண்ணன் அவர்கள் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவரை காஞ்சிபுரம் மாவட்ட தனிப் பிரிவு ஆய்வாளர் திரு.திருவள்ளுவர் அவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். செங்கல்பட்டில் மாவட்ட காவல் அலுவலக இடம் தேர்வு செய்யப்படும் வரை காஞ்சிபுரம் மாவட்ட காவல் அலுவலகத்திலேயே தனி இடம் ஒதுக்கப்பட்டு செங்கல்பட்டு மாவட்ட காவல் அலுவலகம் இன்றிலிருந்து செயல்படும்.