சென்னை: சென்னை பெருநகர காவல்துறைக்குட்பட்ட, F1 சூளைமேடு காவல் நிலைய சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு. ஆனந்த பாபு அவர்கள் தலைமையில், போக்குவரத்து நெரிசல் குறித்த ஆலோசனை கூட்டம் கிருஷ்ணாபுரம் சூளைமேட்டில் அமைந்துள்ள L M Dhaha பள்ளி வளாகத்தில் பள்ளியின் முதல்வர், பொதுமக்கள் முன்னிலையில் போக்குவரத்து நெரிசல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு licence, insurance, FC & RC BOOKS போன்ற அனைத்து ஆவணங்களையும் சரியாக பின்பற்றுமாறு அறிவுரை வழங்கப்பட்டது. குற்ற செயல்களை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும் என காவல்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டது. காவலன் SOS செயலி குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் சூளைமேடு காவல் நிலைய சட்டம் ஒழுங்கு காவல் உதவி ஆய்வாளர் திரு. பாலகுரு, (9551604802) நுங்கம்பாக்கம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு. ஜான் ரூபன் (9940208874) மற்றும் பெற்றோர்கள், கிருஷ்ணாபுரம் குடியிருப்புபோர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.
F1 சூளைமேடு காவல் நிலைய சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு. ஆனந்த பாபு அவர்கள் இக்காவல் நிலையத்திற்கு பணியேற்ற நாள் முதல் குற்றசம்பவங்கள் பெருமளவு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுமக்களிடம் பழகும் தன்மை அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
நமது குடியுரிமை நிருபர்
திரு.R.ராஜா
மாநில பொது செயலாளர் – அரசியல் குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.