சிவகங்கை : சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட ஊர்க்காவல் படையில் சிறப்பாக பணியாற்றிய குருநாதனுக்கு சேவை செம்மல் விருது 2020 (ளழஉயைட ளநசஎiஉந யறயசன 2020) என்ற விருதை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் உயர் திரு.ஜெயகாந்தன் IAS., சிவகங்கை மாவட்ட கண்காணிப்பாளர் உயர்திரு.ரோகித்நாதன், IPS ஆகியோர் வழங்கினர். இந்த விருதை தமிழ்நாடு ஊர்க்காவல் படை அனைத்து வீரர்களுக்கும் சமர்ப்பிப்பதாக விருது பெற்ற திரு.குருநாதன் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் சிவகங்கை இளைய..மன்னர் திரு..மகேஷ்துரை, கவிஞர்.வரதன் மற்றும் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனர் திரு.நிமலன் நீலமேகம் ஆகியேர் கலந்து கொண்டனர்.