சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்களின் உத்தரவுப்படி, தற்போது வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றிலுருந்து காவலர்கள் தங்களை பாதுகாத்து கொள்ளும் வகையில், சிவகங்கை உட்கோட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் அனைத்து ஆளினர்களுக்கும் தனிப்பிரிவு ஆய்வாளர் திரு.பிரேம் ஆனந்த் அவர்கள், மற்றும் சார்பு ஆய்வாளர்கள் திரு.ராதாகிருஷ்ணன், திரு.சபரிதாசன் அவர்களால் Hand Sanitizer, Mask மற்றும் Hand Glouse வழங்கபட்டது. மேலும் காவலர்கள் அனைவருக்கும் முகக் கவசம் அணிந்து பணி செய்யும் படியும், எந்த ஒரு பொருளை தொடுவதற்கு முன்பும், தொட்ட பின்பும் கைகளை நன்கு கழுவ வேண்டும் எனவும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்