சிவகங்கை : கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக தமிழக அரசு விதித்துள்ள 144 தடை உத்தரவை மீறி காரணம் இல்லாமல் 09.04.2020 அன்று சிவகங்கை மாவட்டத்தில் வெளியே சுற்றித் திரிந்த 102 நபர்கள் மீது சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அவர்களிடமிருந்து 52 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் தடை உத்தரவை அனைத்து பொதுமக்களும் கண்டிப்பாக கடைபிடித்து அரசுக்கு ஒத்துழைக்குமாறும், விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால். IPS., அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமிஇராமநாதபுரம்