சிவகங்கை: சிவகங்கை நகர் போக்குவரத்து ஆய்வாளர் திரு. மணி அவர்கள் மற்றும் முன்னாள் தாசில்தார் திரு. தங்கவேல் ஆகியோர் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த விழிப்புணர்வு தொடங்கி வைத்தனர். ஓட்டுனர்கள் வாகனங்களை இயக்கும்போது பொறுமையை கடைபிடிக்க வேண்டும், சூழ்நிலைக்கு ஏற்றவாறு வாகனங்களை இயக்க தெரிந்திருந்தால் விபத்தினை தவிர்க்க முடியும், தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிந்து வாகனங்களை இயக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார். மேலும் சிவகங்கை பேருந்து நிலையத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இலவச சீருடை வழங்கி சிறப்பித்து நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்