சிவகங்கை : சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக ஒருங்கிணைந்த வளாகத்தில் மாவட்ட கியூ பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை போலீசாருக்கு ரூபாய் 67 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட அலுவலக கட்டிடத்தை மாண்புமிகு முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வானொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.
இதையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து இனிப்புகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கியூ பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சந்திரக்குமார், ஆய்வாளர் திருமதி. கற்பகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்