சிவகங்கை : சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், மாவட்ட காவல் துறையின் சார்பில், ரத்ததான முகாம்.மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்த முகாமில் 200க்கும் மேற்பட்ட காவலர்கள் ரத்ததானம் செய்தனர்.
சிவகங்கை மாவட்ட காவல் துறையின் சார்பில் இன்று சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. தற்போது கொரானா தொற்று பரவலால் சமூக அமைப்பினர்,
தன்னார்வலர்கள் ரத்த தானம் செய்ய முன்வராத நிலையில்,மாவட்ட மருத்துவமனை ரத்த வங்கிகளில் ரத்த சேமிப்பு வெகுவாக குறைந்துள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, மாவட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் வேண்டுகோளின் பேரில், மாவட்டம் முழுவதிலும் இருந்து வந்த சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் ரத்த தானம் செய்தனர்.இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.