சிவகங்கை : ஹெல்மெட் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித்நாதன் ராஜகோபால் I.P.S, அவர்களின் உத்தரவின் பேரில் மதகுபட்டி காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் திரு. சந்திரன் மற்றும் திரு. கலையரசன் அவர்கள் தலைமையில் காவல் நிலைய போலீசார் இணைந்து 13.12.2019 அன்று மதகுபட்டி பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடையே தலைக்கவசம் அணிவதன் அவசியம் பற்றியும், தலைக்கவசம் அணியாததால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், சாலை விதிகளை மதித்து பின்பற்ற வேண்டும் என்றும், இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக செல்லும் பயணம் ஆபத்தை உண்டாக்கும் என்று எடுத்துரைத்தனர்.
சிவகங்கையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்
K. ராமசாமி