சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி சிவகங்கை நகர் போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் திரு. பாலசுப்பிரமணியன் அவர்கள் சிவகங்கை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும் சாலை விதிகளை கடைப்பிடிப்பதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு எளிதாக புரியும்படி எடுத்துரைத்தார். பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்க அனுமதிக்க வேண்டாம் என அறிவுரை வழங்கி பொதுமக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.